Monday, September 17, 2007

திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவம்


திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவம்

Monday, September 3, 2007

யூடியூப் அறிவியல்

யூடியூப் அறிவியல்

September 3rd, 2007— minithan
“கஷ்டப்பட்டு படித்து பாசாவதை விட, முன்னாடி இருப்பவனை பார்த்து எழுதி முதல் மார்க் வாங்குவதே நன்று.”
இது தமிழ்ப் பெரியவர்களின் வாக்கு.

இதை தூய தமிழில் “ஆட்டையப் போடுவது” என்று கூறுகிறார்கள்.இந்த யூடியூப் உலகத்தில் இதை எப்படி கடைபிடிப்பது என்பதை இந்த “யூடியூப் அறிவியல் பார்க்கலாம்.

அடிப்படை முதலில் தேவை ஒரு யூடியூப் அக்கவுண்ட். அப்புறம் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்தவுடன் “அப்லோட்”ஐ அமுக்கி விடியோவை சேர்க்க தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ். Youtube FAQவை படித்து தெரிந்து கொள்ளவும்.

சரி. நீங்க யூடியூப்ல பல விடியோக்களப் பாக்கும் போது, சில விடியோக்களால கவரப்படுறீங்க, ஆட்கொள்ளப்படுறீங்க. உடனே இந்த வீடியோவை “ஆட்டையப் போட்டு” நம்ம அக்கவுண்ட்டில் சேர்த்தால் என்னன்னு தோணுது. அதை எப்படி செய்வது ?
ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு “இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை”, ரெண்டாவது “இந்திய சினிமா இயக்குனர்கள் முறை”. சாப்ட்வேர் முறைன்னா காப்பி பேஸ்ட் செய்வது. இயக்குனர் முறைன்னா இந்திய கலாச்சாரத்திற்கு எற்ப தலை சீவி, பொட்டு வச்சி, பவுடர் போட்டு விடுவது.
Ok. சொறிதல் ஸ்டாப்.

இப்படியெல்லாம் “ஆட்டையப் போடுவதால்” என்ன பயன் ?
உங்கள் அக்கவுண்ட்டில் உங்களுக்கு பிடித்த விடியோவை சுட்டு வைக்கமுடியும். Actualஆ இது தேவையேயில்லை. உங்களுக்கு பிடித்த பிறரது விடியோவை Favourite Listல் சேமித்து வைக்க முடியும்.
பலர் விடியோவில் embeddingஐ disable செய்திருப்பார்கள். உங்கள் அக்கவுண்டில் சுட்டுப் போட்டு embeddingஐ enable செய்து கொள்ளலாம்.
Embedding enable செய்த பின்னர், நீங்களே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து (eg., ததிக (தமிழ்த் திரைப்பாடல்கள் கழகம்)) அதில் பகுதிவாரியாக படம் காட்டலாம், பார்ப்பதற்கு பணம் வசூலிக்கலாம், Google Adsense இன்ன பிற வஸ்துக்களைப் போட்டு பணம் சம்பாதிக்கலாம்.

ஒரிஜினலா படம் போட்டவர் ஒருவேளை “மாமியார் வீட்டுக்கு” சென்றாலோ அல்லது “Fine கட்டினாலோ” நீங்களும் அவருக்கு ஆதரவாக இருக்கலாம்.
இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை :
உங்களுக்கு பிடித்த யூடியூப் விடியோவின் அட்ரஸை எடுக்கவும் (ie., URL).
www.keepvid.com ல் அதை கொடுக்கவும்.
கொஞ்ச நேரம் கழித்து, டவுண்லோட் லிங்க் வரும்.

அதை கிளிக்கி, getfile என்ற ஒரு பைலை டவுண்லோட் செய்யவும்.
விடியோவின் ஓடும் நேரத்தைப் பொறுத்து 5MBயிலிருந்து 20MB வரை இந்த பைலின் அளவு மாறுபடும்.

இந்த getfile என்பது ஒண்ணுமில்ல, அது ஒரு Adobe Flash பைலாகும்.
அதுக்கு ஒரு நல்ல பேரு வச்சி, extensionன .FLV என்று மாற்றவும்.
அம்புட்டுத்தேன். இந்த .FLV பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.

இந்திய சினிமா இயக்குனர்கள் முறை :
இந்த முறைல என்ன செய்யலாம்னா, உங்கள் வசதிக்கேற்ப,
உங்கள் பெயர், பட டைட்டில், பாடியவர் பெயர், இசையமைப்பாளர் பெயர் etc., etc. முதலியவைகளை சப் டைட்டில்களாகவோ (sub title), டைட்டிலாவோ (title) சேர்க்கலாம். உங்கள் லோகோவைச் சேர்க்கலாம்.

பிடித்த கலைஞர்களை வாழ்த்தி சின்ன விடியோ கிளிப்பிங்கை சேர்க்கலாம்.
இதுக்கு இலவச Windows Movie Makerஐ பயன்படுத்தலாம். அதில் உள்ள அனைத்து featureஐக் கொண்டு விடியோவை தலைகீழாக மாற்றிவிடலாம். ஒரிஜினலாக அப்லோட் செய்தவனுக்கே அடையாளம் தெரியாமல் செய்துவிடலாம். ஆனால் Windows Movier Makerக்கு Adobe Flash fileஐ அடையாளம் தெரியாது. முதலில் Adobe Flashஐ .AVIஆ மாற்ற வேண்டும். அதுக்கு FFMPEGஐ பயன்படுத்தலாம். இங்க போயி FFMPEG binaryஐ டவுண்லோடு செய்யவும். சரி, ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்க்கலாம்.

இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறைப்படி உங்களுக்கு பிடித்த விடியோவின் Adobe Flash பைலை டவுண்லோடு செய்து கொள்ளவும்.
பின்னர் FFMPEG கொண்டு Adobe Flashஐ .AVIயாக மாற்றுங்கள்.
அதற்கு command promptல் ffmpeg -i get_video.flv -vcodec rawvideo -acodec copy get_video.avi என்று கொடுக்கவும். இங்கு get_video.flv என்பது இன்புட் பைல், get_video.avi என்பது அவுட்புட் பைல். உங்களுடையது வேறு என்றால் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்.

Raw video என்பதால் .AVIயின் அளவு 800MBயிலிருந்து 1.5GB வரை மாறுபடும்.
பின்னர் Windows Movier Makerல் அந்த .AVIஐ திறந்து உங்கள் வசதிக்கேற்ப சேர்க்க வேண்டியதைச் சேர்க்கவும், வெட்ட வேண்டியதை வெட்டவும்.
Save to my computerஐ கிளிக்கி .WMA வாக சேமித்துக் கொள்ளவும். Best Quality for playback on my computer அல்லது Show more choices போய் High Quality video (small) தேர்வு செய்யவும்.

கொஞ்ச நேரம் கழித்து .WMA பைல் கிடைக்கும்.
அம்புட்டுத்தேன். இந்த .WMA பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.

Monday, August 20, 2007

கோடம்பாக்கம் கற்பனை கல்வி நிலையம்

தனது அறையில் மும்முறமாக வேலை செய்து கொண்டிருந்த சி.கணேசன் அவர்கள், ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து நுழைவாசலை பார்த்தார். அங்கு ஜெ.கணேசன் நின்று கொண்டிருந்தார்.
"பிரின்ஸிபாலை பார்க்கனும்" என்று வாசலில் இருந்த உதவியாளரிடம் அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது...
"கணேசா! உள்ளே வாப்பா. நீ பாட்டுக்கும் உள்ளே வரவேண்டியது தானே? ஏன் வெளியே நின்னுக்கிட்டு பெர்மிஷன்லாம் கேட்கிறே" என்றார் சி.கணேசன்.
"இல்லை. என்னதான் நாம்ப நண்பர்களாக இருந்தாலும், இந்த இடத்துல நீங்க பிரின்ஸிபால், நான் உங்க கிட்ட பணிபுரியற ஒரு ஆசிரியர். அதான்" என்று ஜெ.கணேசன் இழுத்தார்.
"அட பரவாயில்லைபா. நீ எப்போ வேணும்னாலும் என் அறைக்கு வரலாம். சரி. உங்க வகுப்பு மாணவர்களை பத்தி ஒரு ரிப்போர்ட் கேட்டேனே? ரெடியா?"
"இருக்குங்க. சொல்றேன் கேளுங்க. முதல்ல, என் வகுப்பு மாணவர்களெல்லாம் ரொம்ப தங்கமானவங்க. திறமைசாலிங்க. என்ன, ஆளாளுக்கு ஒரு தினுசா இருப்பாங்க அவ்வளவுதான்"
"தெரிஞ்ச விஷயம் தானே"
"ஆமாங்க. உதாரணத்துக்கு, ரஜினிகாந்த்னு ஒரு தம்பி இருக்குது. அதுங்கிட்ட இந்திய வரைபடத்தை கொடுத்து சென்னையில கோட்டை எங்கேயிருக்கு, டெல்லி செங்கோட்டை எங்கேயிருக்குன்னு கேட்டா, அந்த தம்பி வெறும் இமயமலையை மட்டும் காட்டுது. மீதியெல்லாம் எங்கேயிருக்குன்னு எனக்கு தெரிஞ்சிகிறதுல ஆர்வமில்லைன்னு சொல்லிட்டு அப்படியே மேலாக்க எங்கியோ பார்த்துகினு உட்கார்ந்துக்குது"
"(சிரிப்புடன்) அந்த தம்பி எப்பவும் அப்படித்தான். ரொம்ப அமைதி. அப்படியே விடு. தொந்தரவு பண்ணாதே.
"அதெல்லாம் பண்ணுவேனா. அப்புறம் கமல்ஹாசன்னு ஒரு தம்பி இருக்கு. ரோமியோ ஜூலியட் காதலை அப்படியே தமிழ்ல சொல்லுன்னா, 'அவன் அவளை உற்று உற்று நோக்க, உற்று நோக்கும்போதெல்லாம் கற்றயாவும் இற்று இற்று போக, அவன் ஒரு நிர்மூலமான நிலைக்கு கிறங்கி செல்ல'ன்னு ரொம்பவே தூய தமிழ்ல சொல்ல ஆரம்பித்தது. நானே கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்"
"எல்லாத்துலேயும் ஒரு பெர்பெக்ஷன் கேட்கிற தம்பி அது. அதும்போக்குலே விட்டுடு"
"சரி விட்டுட்டேன். அப்புறம் விஜயகாந்த்னு ஒரு தம்பி. அறத்துப்பாலில் இருந்து ஒரு குறள் சொல்லுன்னுதான் கேட்டேன். உடனே அந்த தம்பி 'தமிழ் புத்தகத்துல மொத்தம் இருநூறு பக்கம். அதுல செய்யுளுக்கு ஐம்பது பக்கம், உரைநடைக்கு நூற்றைப்பது பக்கம். செய்யுள்ள இருக்கிற ஐம்பது பக்கத்துல, இருபத்தைந்து பக்கம் ஒற்றைபடை எண்கள்ல முடியுது. பாக்கி இருபத்தைந்து பக்கம் இரட்டைபடை எண்கள்ல முடியுது'ன்னு ஒரே புள்ளி விவரமா சொல்ல ஆரம்பிக்குது. குறளை சொல்லவைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது"
"அந்த தம்பியும் அப்படித்தான். ரொம்ப நல்ல தம்பி. விட்டுடு"
"அது சரி. அப்புறம் அஜித்துன்னு ஒரு தம்பி. நீர், நிலம், காற்று பத்தி எழுதுங்கிற கேள்விக்கு, 'நான் யார் கிட்டயும் பேஸ் மாட்டேன். எதுவும் எழுதமாட்டேன்னு" சொல்லுது.
"பரவாயில்லை. இப்ப வர்ற ரெண்டு மூணு பரீட்சையில அந்த தம்பிக்கு நல்ல மார்க்கு வந்தா எல்லாம் சரியாயிடும்"
"அப்புறம் விஜய், சூர்யான்னு ரெண்டு பேருங்க அடிக்கிற லூட்டிதான் தாங்க முடியலை"
"அப்படியா என்ன பண்றாங்க?"
"எப்போ பார்த்தாலும் விஜய், பக்கத்துல இருக்கிற வடிவேலு டீக்கடைக்கு போயிடுது. கேட்டா 'நான் தான் அழகிய தமிழ் மகன். ஆனா எனக்கு சொந்த ஊரு சிவகாசி. அது வெடிக்கிற இடம், இது அடிக்கிற இடம்னு' டயலாக் பேசுது.
"அடிக்கிற இடமா?"
"ஆமாம், டீ அடிக்கிற இடமாம்"
"(சிரிப்புடன்) அது சரி. அப்புறம் சூர்யாவை பத்தி சொல்லுங்க"
"அந்த தம்பியோட லூட்டியும் யாருக்கும் சளைத்ததில்லை. அன்னைக்கு பரீட்சை வைச்சேன். இந்த தம்பி மட்டும் கையில, கால்லன்னு உடம்பு முழுக்க, பாடம் சம்பந்தமா நிறைய எழுதி வைச்சிக்கினு வந்துச்சு"
"ஐயையோ. ஏன்னு கேட்டீங்களா?"
"கேட்டேனே. பரீட்சைன்னு வந்தா மட்டும் அந்த தம்பிக்கு ஏதோ ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி வந்திடுதாம். மொதநாள் நைட்டு முழுசும் படிச்சதெல்லாம் அடுத்த நாள் காலையில பரீட்சைக்கு வரும்போது ஞாபகம் இருக்க மாட்டேங்குதாம். அதனால தான் இந்த மாதிரி உடம்பெல்லாம் எழுதிகிட்டு வருதாம்"
"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?"
"தம்பி உங்கப்பாதானே பக்கத்து கிளாஸ¤க்கு வாத்தியாரு. அவருகிட்ட சொல்றேன். அப்போ உனக்கு மெமரி லாஸ் வருதான்னு பார்ப்போன்னு சொன்னேன். உடனே சமத்தா எல்லாத்தையும் அழிச்சிக்கினு வந்து ஒழுங்கா பரீட்சை எழுதிச்சு"